இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான தனது இன அழிப்பு போரை ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் அப்போதைய தமிழ் தலைவர்களின் பாராளுமன்ற அரசியல் பாதையில் நம்பிக்கை இழந்த தமிழ் இளையவர்கள் ஆயுத போராட்டத்தின் மூலம் தான் தமிழ் மக்களை பாதுகாக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.தனது இராணுவ சக்தியையும் இராணுவ வளத்தையும் மிலேச்சத்தனமாக ஏவிவிட்டு தமிழ் மக்கள் மீதான தனது போரினை அரசாங்கம் நடத்தும் போது தமிழ் மக்களின் ஆயுத பலம் தான் மக்களை பாதுகாக்கும் என்ற வரலாற்றின் நியதிக்கு தள்ளப்பட்டார்கள்.பல இயக்கங்கள் தோற்றம் பெற்றன என்றாலும் மக்களால் அறியப்பட்ட பிரதான இயக்கங்களாக ஐந்து இயக்கங்கள் இருந்தன.விடுதலைக்காக புறப்பட்ட இயக்கங்கள் எல்லாவற்றையும் பயங்கரவாத இயக்கமாகவே இலங்கை அரசு அறிவித்தது.விடுதலை இயக்கங்கள் இடையே ஏற்பட்ட பகைமை உணர்வு ஒரு துன்பியல் வரலாறாகியது.அதன் விளைவு இந்திய இராணுவ காலத்தில் இந்தியாவிற்கு சாதகமாகவும்,இன்று இலங்கை அரசுக்கு சாதகமாகவும் மாறியுள்ளது கண்கூடானது.இன்று பயங்கரவாதிகள் என்று தனது சுட்டுவிரலை புலிகளை மட்டும் நோக்கி நீட்டும் இலங்கை அரசு தன்னுடன் சேர்ந்திருக்கும் பயங்கரவாதிகளையும் தனது இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவோரையும் சனநாயக சக்திகளாக பிரசாரம் செய்கிறது.இது இன்றைய நிலை இப்படியான நிலையில் அன்று ஒரு காலத்தில் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட இயக்கங்கள்,அமைப்புக்கள்,குழுக்கள் ஆகியவற்றின் பெயர்களை இந்த வருட இறுதியில் பதிவு செய்கிறேன்.ஏதாவது பெயர்கள் தவறவிடப்பட்டிருந்தால் பின்னுட்டத்தில் அறிய தரவும்.பிரித்தாளுவது என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு கைவந்த கலை,முரண்பாடுகள் இயல்பானவை தவிர்க்கமுடியாதவை ஆனால் உண்மை என்பதற்கு முன்னால் முரண்பாடு என்ற கருத்தாக்கம் தோற்று போகிறது,எமது ஒற்றுமையின் பலத்தின் மூலம் எமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம் யாசர் அரபாத் இல்லாத பாலஸ்தீனம் இந்த வருட இறுதியில் எமக்கு இன்னொரு செய்தியையும் சொல்லி நிற்கிறது........
தமிழீழ விடுதலை புலிகள் (LTTE)
தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(PLOTE)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி(EPRLF)
ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு(EROS)
தமிழீழ விடுதலை இராணுவம்(TELA)
தமிழீழ இராணுவம்(TEA)
தமிழீழ விடுதலை தீவிரவாதிகள்(TELE)
தமிழர் பாதுகாப்பு பேரவை
தீப்பொறி
செம்படை(RA)
புரட்சிகர தமிழீழ மக்கள் விடுதலை இராணுவம்(TERPLA)
தமிழீழ புரட்சி அமைப்பு(TERO)
தமிழீழ விடுதலை கெரில்லாக்கள்(TELG)
தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)
தமிழீழ பாதுகாப்பு படை(TEDF)
இலங்கை விடுதலை தமிழ் இராணுவம்(IFTA)
தமிழீழ தேசிய இராணுவம்(TENA)
தமிழ் மக்கள் பாதுகாப்பு அமைப்பு(TPSO)
தமிழீழ கொமாண்டோக்கள்(TEC)
தமிழீழ கழுகு முன்னணி(TEEF)
கழுகு படை(EM)
தமிழீழ கொரில்லா இராணுவம்(GATE)
சமூக புரட்சி சமூக விடுதலை(SRSL)
மூன்று நட்சத்திரங்கள்(THREE STARS)
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ENDLF)
தமிழீழ விடுதலை கோப்ராக்கள்
தமிழீழ புரட்சிகர விடுதலை இயக்கம்.(RELO).
Read more...