Monday, November 24, 2008

ஸ்ராலின் கிராட் சமர்..............


சுருக்கமாக சொல்வதானால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இன்று வோல்கோ கிராட் என்று அழைக்கப்படும் ஸ்ராலின் கிராட்டில் நடைபெற்ற யுத்தம்.உலக வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்ற போதிலும் இன்றுவரை பேசப்படுகிற அல்லது விமர்சிக்கப்படுகிற யுத்தங்கள் மிக குறைவானவை ஆனால் இன்று வரை ஸ்ராலின் கிராட் யுத்தம் பற்றி பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது,தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது,சவுத் ஏசியா அனலைஸ் குரூப் ஆய்வாளர் தற்போது இலங்கை நிலவரம் பற்றிய ஆய்வில் இந்த யுத்தத்தை மேற்கோள் காட்டிவிட எம்மவர் மத்தியில் ஸ்ராலின் கிராட் பற்றி அதிகம் பேசப்படுகிறது அதனால் விம்பமும் ஸ்ராலின் கிராட் யுத்தத்தினை நினைவு கொள்கிறது.


இரண்டாம் உலக யுத்தத்தின் ஐரோப்பிய அரங்கின் திருப்பு முனையாக கருதப்படும் இந்த சமர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்தது,நீண்ட காலம் நடைபெற்ற ஒரு மரபு வழி சமராக இராணுவ ஆய்வாவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.17 ஜூலை 1942 இற்கும் பெப்ரவரி2 1943 இற்கும் இடையில் நடைபெற்ற இந்த சமரில் மொத்தமாக 1.5 மில்லியன் பேர் பலியானார்கள்.இரண்டு நாள் இரண்டு வாரம்,இரண்டு மாதம் என ஹிட்லரால் எண்ணப்பட்ட நாட்களின் கனவு தவிடுபொடியானது.22 ஆம் திகதி ஜூன் மாதம் 1941 ஆம் ஆண்டி ஹிட்லரின் நாசி படை சோவியத் மீது பார்பரோசா என்ற பெயரில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தது.ஜேர்மன் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் விரைவாக சோவியத் பகுதிக்குள் ஆழ கால்பதித்தார்கள்.ஸ்ராலின் கிராட் மீது ஹிட்லர் படை எடுப்பதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று வால்கா நதிக்கரையில் அமைந்திருந்த இந்த நகரம் கஸ்பியன் கடலையும் வடக்கு ரஸ்ஸியாவையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்தது.மற்றய காரணம் எண்ணை வள பகுதியான க்கஸஸ் பகுதியை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பாதுகப்பாக இருக்கும் என்பதும் ஆகும்.இதனை விட உளவியல் ரீதியாக ஸ்ராலின் பெயரில் நகரம் இருந்ததும் ஸ்ராலின் கிராட் நகரை கைப்பற்ற ஹிட்லறை தூண்டியது.

ஜேர்மனிய 6 வது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய ஜெனரல் போலசின் பணி காகஸஸ் பகுதியில் உள்ள எண்ணை வழங்களை கைப்பற்றுவதாக இருந்தபோதிலும்,அதற்காக ஸ்ராலின் கிராட்டை கைப்பற்றுமாறு ஹிட்லரால் உத்தரவிடப்பட்டது.செய் அல்லது செத்து மடி என்பது போல தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டது,தமது தலைவனின் பெயராலான நகரை காப்பதற்குபொது மக்களும் ஆயுதம் ஏந்தினார்கள்.இருவருக்கு ஒரு துவக்கு என்ற வகையில் ஆயுதம் வழங்கப்பட்டது.ஒரு அடி கூட பின்னகர வேண்டாம் என உத்தரவு பிறந்தது.பல இடங்களை ஜேர்மனியர்கள் கைப்பற்றியபோதும் அவற்றை நிலையாக தக்க வைக்க முடியவில்லை.பகலில் ஜேர்மனியர்கள் கைப்பற்றிய பகுதிகளை இரவில் ரஸ்ஸியர்கள் மீளவும் மீட்கப்பட்டது.அகல கால் பதித்த ஜேர்மனியர்கள் மீதான முறியடிப்பு சமரினை மேற்கொள்ள நவம்பர் 19 அளவில் ரஸ்ஸியா முழுமையான தயார் நிலையினை அடைந்தது.ஒரு மில்லியன் படைபலம் கொண்ட 6 படைப்பிரிவுகள் மார்ஷல் சுகோவ் தலைமையில் நகரை சுற்றிவளைக்க தயாராகினர்.வடக்கு பகுதியில் இருந்து ரமானன்கோ தலைமையிலான 5 ஆவது தாங்கி படையணி தாக்குதலை ஆரம்பிக்க 21,65,24.64,57,52 ஆவது படையணிகள் தெற்கு பகுதியில் இருந்து தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌ன‌.இரு முனை தாக்குத‌ல் அணிக‌ளும் ந‌வ‌ம்ப‌ர் 23 ஆம் திக‌தி காலாச் ப‌குதியில் இனைந்து கொண்டன.250 000 முதல்300 000 வரையிலான ஜேர்மன் படையினர் சுற்றி வளைக்கப்பட்டு பொறிக்குள்அகப்பட்டு கொண்டார்கள்.எவரும் சரணடைய கூடாது என்றும் இறுதி தோட்டா உள்ளவரை யுத்தம் செய்ய வேண்டும் எனவும் கட்டளை இட்ட ஹிட்லர் போலஸை ஊக்குவிப்பதற்காக பதவி உயர்வையும் வழங்கினார்.எவையும் வேலைக்கு ஆகவில்லை,கால நிலை மோசமானது,வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் சென்றது.ஆயுதங்களுக்கும்,உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது,எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஜனவரி1943 இல் தென் பகுதி ப‌டையின‌ர் ச‌ர‌ண‌டைய‌ வ‌ட‌ ப‌குதி ப‌டைய‌ணி 2 ஆம் திக‌தி பிப்ருவ‌ரி ச‌ர‌ண் அடைந்த‌து.பெரும்பாலான‌ ப‌டையின‌ர் இற‌க்க‌ 91000 இற்கும் அதிக‌மானோர் சிறைப்பிடிக‌ப்ப‌ட்டார்க‌ள்.ஸ்ராலின் கிராட்டின் தோல்வியும்,படையணிகளின் இழப்பும் ஜேர்மனியால் ஈடு செய்ய முடியாது போனதை ஜேர்மனி மீது ரஸ்ஸியா படை எடுத்த தருணங்கள் உணர்தி நிற்கிறது.



ஹிட்லரின் தளபதிகள் ; போலுஸ்,மன்சுடெயின்,ரிச்தோபுன்,கொசுடாவ் ,கரிபால்டி,துமிதிரிஸ்கு,கொண்ஸ்டான்டினெஸ்.

ஸ்ராலினின் தளபதிகள் ;

ஸ்யிகொவ், யெமெரென்கோ,வஸ்யேவ்சுகி,கிரகொரி ,செம்யோன்,மலினொவ்சுகி .

படை பலம்


ஜேர்மன்;ஆட்பலம் 1 011 500 ஆட்லறி10,290 தாங்கிகள் 675 விமானங்கள் ;1,216.

ரஸ்ஸியா; ஆட்பலம் 1,000,500 ஆட்லறி 13,541 தாங்கிகள் 894 விமானங்கள் 1,115.


Read more...

Tuesday, November 11, 2008

11-11-1918 -காலை பதினொரு மணி .......



1918 ஆம் ஆண்டு பதினோராம் மாதம் பதினோராம் திகதி காலை பதினொரு மணி உலகத்தை உலுக்கிய முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த நாள்.தொண்ணூறு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் உலகில் இன்னமும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை.முதன் முதலாக போரில் விசவாயு பயன்படுத்தப்பட்ட யுத்தம்.ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நேச நாடுகளின் படைகள் நுழைந்ததுடன் முடிவுக்கு வந்தது.ஒன்பது மில்லியன் படையினர் இறக்க இருபதியொரு மில்லியன் படையினர் காயம் அடைய ஆக குறைந்தது ஐந்து மில்லியன் பொதுமக்களும் பலி கொள்ளப்பட்டனர்.ஜேர்மனி,ரஷ்யா,ஆஸ்ரியா ‍ஹங்கேரி,பிரான்ஸ்,இங்கிலாந்து ஆகியா நாடுகளை சேர்ந்தோர் சராசரியாக ஒவ்வொரு மில்லியன் மக்கள் பலியானார்கள்.


ஜூன் மாதம் இருபத்தியெட்டாம் திகதி 1914 ஆம் வருடம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமே இந்த உலக யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.சேர்பிய நாட்டவரால் ஆஸ்திரிய இளவரசரும் அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட சேர்பியா மீதான போர் பிரகடனத்தை ஆஸ்திரியா ஜூலை இருபத்திஎட்டாம் திகதி வெளியிட்டது.இருபத்தி ஒன்பதாம் திகதி சேர்பிய தலைநகர் மீதான தாக்குதலை ஆஸ்திரிய படை ஆரம்பித்தது.சேர்பியாவுக்கு ஆதரவாக பிரித்தானியா,பிரான்ஸ்,ரஷ்யா,இத்தாலி ஆகியநாடுகளும்,ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக ஜேர்மனி,ஹங்கேரி,பல்கேரியா,துருக்கி ஆகிய நாடுகளும் களம் இறங்க 1914 ஆகஸ்ட் மாதம் முதலாம் உலகப் போர் வெடித்தது.1561 நாட்கள் நீடித்த யுத்தம் 11/11/1918 பகல் 11 மணிக்கு முடிவுக்கு வந்தது.இந்த யுத்தகாலத்தில் தான் ரஷ்யாவில் முதலாவது கம்யூனிச சாம்ரச்சியம் உதயமாகியது.பல புதிய நாடுகள் பிறப்பெடுத்தன.90 வருடங்கள் கடந்தாலும் உலகில் இன்னும் யுத்தம் ஓயவில்லை

Read more...

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP