பிள்ளையார் பிடிக்கப்போய் தொடர்ச்சி................
கன நாளுக்கு பிறகு ரிசப்சனோ,சாமத்தியவீடோ கொண்டாட துவங்கிவிட்டார்கள்.சரி அந்தப்பக்கமாய் ஒருக்கால் நடந்து போவம் என்ற முடிவில் ஒரு பயணம்.கைத் தொலை பேசி சிணுங்கியது.கனடாவில் இருந்து எனது நண்பன்,மச்சான் லன்டன் என்ன சொல்லுது இது முதற் கேள்வி எனது பதில் அது ஒக்கேடா.மச்சான் சனம் எல்லாம் எப்பிடி இது அடுத்த கேள்வி, சனம் ஒகே மச்சான் நான் என்ன எம் மீ யோ சனம் எப்பிடி எண்டு சொல்ல இது அடுத்த பதில்.வேலையெல்லாம் எப்பிடி அடுத்த கேள்வி, வேலை ஒரு மாதிரி போகுது இது என்னோடை பதில்,என்ன ச்லோவை கதைக்கிறாய் இது அடுத்த கேள்வி இப்பத்தான் வேலையாலை வாறன் கொஞ்ஜம் களைப்பு அது தான் பதில் சிலோவய் இருக்கு இது நான்.அவனுக்கு எனது பதில் அலுப்பு தந்திருக்க வேணும் போல தனது கதையை மாற்றினான். டேய் கலியாணம் கட்டிப் போடாதை,கட்டினாலும் கனடாவிலை கட்டிப் போடாதை, அப்பிடி கட்டினாலும் பொம்பிளையை பெத்துப் போடாதை என்று சொன்னான்.
எனக்கு அவன் எதை சொல்ல வந்தான் என்று விளங்கவே இல்லை,கனடா எனக்கு தெரியாத தேசம் சும்மா நக்கலாக அவனுக்கு சொன்னேன் கள்ளிப்பால் கொடுத்து கொம்மா உன்னை சாக்காட்டி இருக்கலாம் சும்மா அறுக்காதே அவன் சொன்னான் கொம்மா உனக்கு நெல்லை தீத்தி இருக்கலாம் என்று.சரிடா திரும்பவும் விடிய வேலை இனி போய் சாப்பிட்டு படிக்க வேணும் நாளைக்கு உனக்கு அடிக்கிறன் என்று நான் சொல்ல அவன் விடுகிற மாதிரி தெரியவில்லை.
நீ ஒன்டும் கதைக்க வேண்டாம் நான் கதைக்கிறன் கேள் கேக்கிறியா இல்லையா? இதற்கு மேலும் கேட்காமல் இருக்க முடியவில்லை சரி கேக்கிறன் கதை என்று சொன்னேன்.முதல் தொடக்கமே எனக்கு கஸ்டமாய் இருந்தது அதற்கு காரணம் அவன் ஆரம்பித்த வசனம் எங்கடை எளிய சாதியள் இங்கே கன்டாவிலை
என்று ஆரம்பித்தான் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாய் சற்று லேட்டாய் விளங்கியது. பையன் தண்ணி அடித்துவிட்டுத்தான் ரெலி போன் அடிச்சிருக்கிறான் என்று.ஒரு நிமிசம் பொறடா என்று சொல்லிட்டு நானும் ஓடிப்போய் திறந்திருந்த ஒரு கடையில் ஒரு பீர் வாங்கிட்டு பல்லால் மூடியை திறந்து ஒரு முடறு குடித்துவிட்டு அவனின் கதையை கேட்க ஆயத்தமானேன்.அவன் திரும்பவும் எங்கடை எளிய சாதிகள் எண்டான். நான் அவனிடம் டேய் தண்ணி போட்டிட்டாய் எண்டதுக்காக கண்டபடி கதைக்காதே.ஒழுங்காய் கதை என்றேன்.திரும்பவும் சொன்னதையே சொன்னான்.சரி அப்பிடியே இருக்கட்டும் சொல்ல வந்ததை முதலில் சொல்லு என்றேன் அவன் சொன்னதை கேட்டு நான் வடிவேலு போல அப்பிடியே ஷாக் ஆயிட்டன்.
அவன் சொன்னது இது தான் இப்ப எல்லாம் சாமத்திய வீடு என்றால் கனடாவில் வயசுக்கு வந்த பெண் மணவறைக்கு வரும் நேராம் கெலிகப்டரை வாடகைக்கு பிடித்து பூ தூவிகினம்.இது எவ்வளவு கொடுமை தெரியுமோ சும்மா காசு இருக்கிறதை காட்ட இந்த நாயளுக்கு வேறை வழி திரியேல்லை போலை எண்டான்.நான் சொன்னேன் அது பிழைதான் . அவன் பதில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.அவனின் பதிலுடன் நான் கண்ட மண்டப கதைகளுடன் அடுத்த வாரம் பதிவை தொடர்கிறேன்..................