Saturday, October 25, 2008

ஈழ தமிழனின் அவலக்குரல்......... கேட்கிறதா சொந்தங்களே ??????

Read more...

Friday, October 17, 2008

யூரோ கணவாயில் பதிந்த சேயின் இறுதி கால் தடங்கள்.......


அக்டோபர் 09

யூரோ கணவாய் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி உலகின் ஒப்பற்ற போராளியின் கால் தடம் இறுதியாக பதிந்த இடம்.பொலிவிய இராணுவம் கும்மாளம் இட்டது.பிடிபட்ட மனிதனை பனாமா கொண்டு செல்ல சி ஐ ஏ விரும்பிய போதும் சுட்டுக்கொலை செய்யும்படி பொலிவியாவின் தலைவனால் இராணுவ தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.தமது தலைவனின் கால் தடத்தை கண்டு கொண்ட போரளிகள் குழு எப்படியும் தமது தலைவரை அந்தித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கால் தடத்தை பின்பற்றி கிராம் பள்ளி அருகெ சென்று மறைந்து நிலை எடுத்து விடியும் வரை தாக்குதலுக்காக காத்திருக்கிறது.அவர்கள் மறந்திருந்த புதருக்கு அருகில் இருந்த அறையில் தான் அவர்களின் தலைவன் சிறைவக்கப்பட்டுள்ளார் என்பதை அந்தப் போராளிகள் அறிந்திருக்கவில்லை.காலை பறந்த உலங்குவானூர்தியில் தமது தலைவரின் உடல் தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதையும் அறிந்திருக்கவில்லை.

கணவாயில் பிடிபடும்போதே தன்னை கொல்லாதவர்கள் தன்னிடம் விசாரணை நடத்தி கடும் தண்டனை தருவார்கள் என்று நம்பிய போராளியை கோழத்தனமாகவும் நயவஞ்சகமாகவும் மதுபோதையின் தடுமாற்றத்தோடு லூயி டெக்ரரான் என்ற இராணுவத்தினன் சுட்டு கொன்றான்.சுட்டதோடு மட்டும் அவர்களின் கொலைவெறி அடங்கவில்லை.உன்னதமான அந்த போராளியின் இரண்டு கைகளும் வெட்டி அகற்றப்பட்டன.தோல்விகண்டது நான்மட்டும் தான் ஆனால் புரட்சியல்ல இறுதிவரை புரட்சிப்போர் தொடரும் என தன்னை கைது செய்தோரிடம் இறுதியாக சொன்ன வார்த்தைகள்.ஆயுத போராட்டத்தின் மூலமே அனைத்து அடக்கு முறைகளையும் தகர்த்து எறியலாம் எனவும் அமெரிக்கவிற்கு எதிராக பல வியத்நாம்கள் உருவாக வேண்டும் எனவும்,சொல்லுவந்த சர்வதேச போராளி .அவர் தான் சேகுவேரா.

பத்துமாதத்திற்கு ஒரு மாதம் முன்பே இந்த உலகை பார்த்த குழந்தை,இறுதிவரை அஸ்துமாவுடன் போராடியவன்,மருத்துவன்,தொழு நோயாளிகளுக்கு தொண்டாற்றியவன்,மாணவனாக இருந்தபோதே பன்னிரெண்டு மாநிலங்களை சுற்றி வந்தவன்.கரும்பு தோட்ட பணியாளி,தொழில் சங்க தலைவராவதற்காக சுரங்க தொழிலாளியாக பணியாற்றியவர்,காஸ்ரோவின் பிரதான தளபதி,கியூப புரட்சியின் நட்சத்திரம்,குடியுரிமையையும்,அமைச்சர் பதவியையும் உதறிவுட்டு கங்கோலியாவில் புரட்சிக்காக புறப்பட்டவன் பதினாறு மாத காலம் பொலிவியாவில் போராட்டம் என சுருக்கமாக கூறினாலும் அந்தப்போரளியின் வரலாறு இதனையும் தாண்டியது.

எண்பத்தியிரண்டு போரளிகளை சுமந்துகொண்டு புறப்பட்ட கிராண்மா படகில் தான் சேயின் வரலாறும் வீர வரலாறு ஆகிறது.கேலாரடோஸ் கரையில் படகு தரை தட்டி போராளிகள் கரை சேர்ந்த்ததுமே சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார்கள்.அப்போது தான் சேயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னம் பாட்டஸ்ட படை உறுப்பினர் ஒருவரை கொன்றது.இது தான் ஆரம்பம்.சே தலைமையிலான பதினெட்டு பேர் கொண்ட போராளிகள் குழுஆயுத பலம் பொருந்திய ஐம்பத்துமூன்று இராணுவத்தினரை மே மாத்ததில் எதிர்கொண்டு பாரிய வெற்றியை ஈட்டியது.இந்த தாக்குதல் போராட்டத்துக்கு ஆதரவாக நடுத்தர மற்றும் விவசாய மக்களை இணத்தது.போராளிகளில் மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.ஜீலை 26 தாக்குதலுக்கு முன்னர்21 ஜீலை 1957 இல் சே தளபதியாக நியமிக்கப்பட்டார்.போராளிகளை காட்டி கொடுப்போருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.{இது குறித்து ரால் காஸ்ரோவும் சேயும் விவாத்திததாக கூறப்படுகிறது 1959 ஆம் ஆண்டு லக்பானாவில் பலருக்கு மரண தண்டனை வழங்கும் படிவத்தில்கையொப்பம் இடும் போதும் சே குழப்பம் அடைந்த்தாகவும் கூறப்படுகிறது.].சான்டாகிளாரா போர் சேயின் சிறந்த போராற்றலையும் மன உறுதியயும் உலகுக்கு வெளிப்படுத்தியது.கியூப புரட்சியின் வெற்றியின்பின்னர் சே கியூப குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.தொழில் அமச்சராக பதவியேற்ற போது வங்கி தலைவர் பதவியையும் ஏற்று கொண்டார்.இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போராடவிரும்பிய போராளிகளுக்கு பயிற்சி அளித்த சே ஆர்ஜென்ரீனா போக விரும்பினாலும் காஸ்ராவின் தலையீட்டால் அம் முயற்சி தடுக்கப்பட்டது.கியூபா குடியுரிமைய துறந்த அவர் கொங்கோ நோக்கி தனது போராட்ட பாதையை தொடர்ந்தார்.கிராண்மா படகில் சேயிற்கு வழங்கிய வாக்குறுதியை காஸ்ரோவால் மீற முடியாமல் அனுமதி வழங்கப்பட்டது.கொங்கோவை நோக்கி சே பயணித்த பின்பு தான் கியூபாவின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது.இந்த கூட்டத்தில் தான் பல்லாயிர கண்க்கான மக்கள் முன் சேயினால் காஸ்ரோவிற்கு எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது.

கொங்கோவில் கபிலாவின் தவறான போக்கினால் போராட்டத்தில் சரியாக ஈடுபடமுடியவில்லை.இதனை விட கங்கோலியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட கொள்ளயடிப்பதிலே முழுமூச்சாக இருந்தார்கள்.குண்டு சத்தம் கேட்டவுடன் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள்.போராளிகள் மன சோர்வடைந்தார்கள்.தனது தாய் இறந்த சேதியை அறிந்தார்.கபிலாவை மீறி முடிவு செய்தவர். தானே போராட்ட களத்தில் குதித்தார்.ஜூலை கடைசியில் சே தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டது.போராளிகள் தெம்படைந்தார்கள்.ஒலிம்பியாவை கைப்பற்றி பல இடங்களில் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்த முடிவு செய்தார்.ஆனால் சேயின் நிலையை கடிதங்கள் மூலம் அறிந்த காஸ்ரோ சேயை காப்பாற்ற முடெவெடுத்தார்.எதிரிகள் நெருங்கி கொண்டிருந்த்த நேரத்தில் குவேரா படகேறினார்.

கியூபா செல்வதற்கு விரும்பாத குவேரா ஆர்ஜென்டீனா சென்று அங்கு கொரில்லா போ.ராட்டத்தை ஆரம்பிக்கபோவதாக கூறினார்.தான்சானியா சென்றபின்னர் அது பற்றி சிந்திக்கலாம் என கூறிய காஸ்ரோவின் பிரதிநிதிகள் அவரை தான்சானிய தலை நகரில் அமைந்திருந்த கியூப தூதரகத்தின் மேல் அறையில் தங்க வைத்தார்கள்.மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது.சேயின் மனைவியும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இறுதியாக தயார்படுத்தலுக்காக கியூபா திரும்ப ஒப்பு கொண்டார்.பல நாடுகள் பரீட்சிக்கப்பட்டு இறுதியாக பொலிவியா தேர்வானது.அப்போது பொலிவிய கம்னியூஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவருடன் பேச்சுக்கள் நடைபெற்றன.ஆஜென்டீனா செல்லும் வழியில் ஒருவர் கடந்து செல்ல உதவ வேண்டும் எனவும் சிலர் பயிற்சி பெற உதவ வேண்டும் என்வும் கேட்கப்பட்டது.மறு புறத்தில் தமது பெயர்கள் மாற்றப்பட்டு போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.மிகவும் இரகசியமானா முறையில் பயிற்சி வழங்கப்பட்டது.1966 பங்குனி மாதம் சான் ஆன்ரோ முகாம் கலைக்கப்பட்ட்டது.பொலிவியாவிற்கு கொரில்லா போர் பொருந்த்தாது என மீண்டும் மீஇண்டும் சேயிடம் வலியுறுத்தப்பட்டது.காலம் வரும் என்று காத்திருக்க முடியாது ஏதோ ஒரு இடத்தில் ஆரம்பிக்கவே வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.தனது போராளிகளை மூன்று குழுக்களாக பிரித்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் போராளிகளின் காமிலோ முகாம் அமைந்திருந்தது.ஆனால் முகாமிற்கு அருகில் வசித்த இருவரின் சந்தேக பார்வை போராளிகள் மீது விழுந்தது.இடத்தை மாற்றிவிட விரும்பிய சே புதிய இடம் தேடும் முயற்சியில் இறங்கினார்.போராளிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.முகாமில் இருந்த பல பொருட்கள் புதைக்கப்பட்டன. கியூப நாட்டவரான மாக்ஸ் உட்பட நான்கு பேர் முகாம் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இருபத்திஐந்து நாள் பயணம் திட்டமிடப்பட்டது.ஒவ்வொருவரும் இருபதுகிலோ பாரத்தை சுமந்தபடி தண்ணீர் இல்லா புதர் காடுகளினூடாக பயணத்தை தொடர்ந்தனர்.தாகம் தாங்க முடியாத சிலர் சிறுநீரை அருந்தினர்.மற்றைய குழுனினர் உடனான தொடர்புகள் இல்லை.வழியில் குதிரை இறச்சியை உண்டதால் உடல் உபாதைக்கு ஆளானார்கள்.போராளிகளுக்கு இடையில் முரண்பாடுகளும் தர்க்கங்களும் ஏற்பட்டன.போராடுவதற்கு முன்னரே ஒரு போராளி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.உடல் நலக் குறைவால் சேயும் பலவீனமடைந்தார்.போராளிகள் மீண்டும் முகாம் திரும்ப முடிவு செய்தனர்.சேயை தேடி சென்ற சில போராளிகள் வழியில் சந்தித்த விவசாயியிடம் உணவு கேட்டனர்.விவசாயி உணவளித்தார்.ஆனால் தகவல் இராணுவத்துக்கு பறந்தது.இரண்டு பேர் சரணடைந்தனர்.முழு தகவலும் இராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.அதே நாளில் சேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான பொலிவிய போராளி காலோஸ் படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கினார்.நாற்பத்தி ஒன்பதாம் நாள் மீண்டும் முகாம் பகுதிக்கு திரும்பினர்.பங்குனி இருபதாம் திகதி ரோந்து இராணுவ உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.முதல் போர் வெடித்தது.ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்டன.இராணுவம் கொதிப்படைந்தது.மலை பகுதியை நோக்கி நகர சே திட்டம் வகுத்தார்.இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட 24 பேர் கைதாகினர்.5 பேர் காயம் அடைந்தனர்.சேயின் வீரம் செறிந்த தளபதிகள் இருவர் மரணித்தார்கள்.இப்படியான நேரத்தில் சில போராளிகள் நழுவினார்கள்.பொலிவியர் கியூபர் என்ற பிரச்சினை எழுந்தது.புதிதாக எவரும் இணையவில்லை.இரண்டு கிராமங்களுக்குள் சென்று விவசாயிகளிடம் ஆதரவு கேட்டார்கள்.பலனில்லை.ஆகஸ்ட் 7 ஆம் திகதி போராட கூடிய ஆறு பேரில் தான் ஆஸ்மாவுடன் போராடுவதாக சே எழுதினார்.தான் பயணம் செய்த குதிரையையே உணவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.காட்டு வழியாக மீண்டும் ஆதார முகாம் நோக்கி புறப்பட்டனர்.போராளிகளுக்கு பணத்துக்காக பொருட்களை விநியோகம் செய்த ரோஜசின் உதவியுடன் சதிவலை பின்னப்பட்டது.அமெரிக்க குடியேற்ற கனவும் பணமும் ஆசை காட்டப்பட்டன.முகாமுக்கு அருகில் இருந்த இராணுவ நிலைகள் அகற்றப்பட்டன்.ஆற்றங்கரையில் ஓரிடத்தில் தான் சந்திப்பதாக கூறப்பட்டது.மறு நாள் போராளிகள் அவ்விடம் சென்று உணவை பெற்றார்கள்.தனது மகன் மூலம் ஏற்கனவே இராணுவத்திற்கும் தகவலை வழங்கி இருந்தான்.போராளிகள் திரும்பி செல்வதற்கான வழியும் அவனால் கூறப்பட்டது.அதே இடத்தில் இராணுவத்தினர் தயாராக நின்றிருந்தார்கள்.சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.பலர் கொல்லப்பட சிலர் கைதாகினர்.இது நடை பெற்றது ஆகஸ்ட் 30.செப்டம்பர்26 ஆம் திகதி சே தலைமையிலான குழுவினர் கிகியோரா கிராமத்தை அடைந்து அங்கிருந்து வெளியேறும் போது தாகுதலுக்கு உள்ளாகினர்.அக்டோபர் 3 இலிருந்து 7 ஆம் திகதிவரை கணவாய் வழியாக நகர்ந்தனர்.இராணுவ முற்றுகையை உடைத்து தப்பிக்க திட்டம் வகுக்கப்பட்டது.தப்பித்து பிடல்பார்க்கோ ஆற்றங்கரையில் ஒன்றாக சந்திக்க முடிவு செய்யப்பட்டது.ஒவ்வொரு கணவாயக நர்ந்து தப்பிக்க சே முயன்றார் .இராணுவம் நெருங்க்கிவிட்டது.மோதல் வெடித்ததுமூன்று போராளிகள் மருணித்தார்கள்.சேயின் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.சேயின் துப்பாக்கியும் செயலிழந்தது.சேயும்,வில்லியும் நிராயுதபாணிகளாக கைதானார்கள்.கயிற்றால் இருவரையும் கட்டி அருகிலிருந்த பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கு தான் 39 ஆன்டுகள்45 நாட்கள் வாழ்ந்த மனித சரித்திரம் கோழை தனமாக கொலை செய்யப்பட்டது.

***தவிர்க முடியாத சில காரணங்களால் அக்டோபர் 9 ஆம் திகதி இப்பதிவை பதிவிட முடியாமைக்கு விம்பம் தனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது*****

Read more...

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP