Saturday, September 27, 2008

தேசியத்தின் தேவை.................


ஸன் யாட் ஸென் ஆற்றிய 16 சொற்பொழிவுகளை கொண்ட சுதந்திரத்தின் தேவைகள் என்ற புத்தகத்தை அண்மையில் வாசிக்க நேர்ந்தது.தமிழாக்கத்தை வெ.சாமிநாத சர்மா சுந்திருந்தார்.தேசியத்தின் தேவை என்ற சொற்பொழிவை விம்பம் தனது நண்பர்களுக்காக பதிவு செய்கிறது.இயலுமானவரை சுருக்கியே இப் பதிவு பதிவிடப்படுகிறது.நண்பர்களின் கருத்துக்கள் உற்சாகம் தரும் .தேசிய உணர்ச்சி என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு 10-02-1924 இல் நிகழ்த்தப்பட்டது



ஒரு ராஜ்யம் முன்னுக்கு வருவதற்கும் தனது வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி கொள்வதற்கும் தேசிய உண்ர்ச்சி அவசியமானதாகும்.அந்த உண்ர்ச்சி இருப்பது ஒரு பொக்கிசம் இருப்பது போலாகும்.இன்று சீனா அதனை இழந்துவிட்டது.ஏன்?
இந்த தேசிய உணர்ச்சியை நாம் ஒரு நாளில் இழக்கவில்லை.அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே இழந்துவிட்டோம்.1911 ஆம் வருட புரட்சிக்கு முன்னர் தேசியத்தை எதிர்த்து பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாவற்றையும் பாருங்கள்.அந்த காலத்தில் தோன்றிய நூல்களில் எல்லாம் தேசிய உண்ர்ச்சி காணப்படவில்லை.அவை ம்ஞ்சு அரச புகளையே பாடி நின்றன.அந்த அரச பரம்பரைக்கு எதிராக ஒரு வரி எழுத கூட யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை.சமீப காலத்தில் புரட்சி எண்ணங்கள் எழுந்த சமயத்தில் கூட தாங்களே புலவர்கள் என்று பெருமைப்படுத்திக்கொண்ட பலர் தினம் தோறும் ம்ஞ்சுக்கள் புகளையே பாடினார்கள்.நாங்கள் டோக்கியோ நகரத்தில் ஜனபத்திரிகை என்ற பெயருடன் ஒரு தினசரி நடத்தி வந்தோம்.அதன் மூலமாக தேசிய பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது மஞ்சுக்கள் சீனாவை ஆண்டுவந்ததால் நாம் அடிமை பிரசைகள் ஆகவில்லை என்று சிலர் கூறிக்கொண்டு வந்தார்கள்.இங்கனம் கூறிக்கொண்டு இருப்போர் மஞ்சு அரச பரம்பரையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ஒரு சங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல , சீனாவின் தேசிய உணர்ச்சியை நசுக்கவும் இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் சீனாவில் வசிப்பவர்கள் அல்லர்.சீனாவுக்கு புறம்பான நாடுகளில் வசிக்கும் சீனர்கள்.ஆனால் சீனாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு இவர்கள் புரட்சியை ஆதரித்தார்கள்.
சீனாவில் தேசிய உணர்ச்சி இறந்து போனதற்கான சில காரணங்களை கூற விரும்புகிறேன்.இதற்கு காரணங்கள் பல.இவற்றில் முக்கியமானது நாம் அந்நிய இனத்தினுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பது தான்.ஒரு இனம் மற்றொரு இனத்தை ஆதிக்கம்கொண்டுவிட்டதேஆனால் ஆதிக்கம் கொள்ளப்பட்ட இனம் சுதந்திர எண்ணம் கொண்டு வாழும்படி அனுமதிக்கப்படுவதில்லை.


அந்நியருடைய ஆதிக்கத்தினால் சீனாவின் தேசியம் நசுக்கப்பட்டுவிட்டது.ஆனால் சீனர்களைவிட அடிமைப்பட்டுப்போன இனத்தினர் இன்னும் பலர் இருக்கிறார்கள்.உதாரணமாக யூதர்கள் .இயேசுவின் திருநாளைக்கு முன்பே தங்கள் நாட்டை இழந்து பிறரால் வெற்றி கொள்ளப்பட்ட இனம் ஆகிவிட்டார்கள்.இயேசுநாதர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தகாலத்தில் அவருடைய சீடர்கள் அவரை புரட்சிகாரர் என்றே கருதினார்கள்.அவர் யூதர்களின் அரசன் என்றே கருதப்பட்டார்.அவருடைய இரண்டு சீடர்களின் பெற்றோர்கள் அவரை பார்த்து ஆண்டவரே ; என்க்களுடைய நோக்கத்தை நிறைவேற்றி வைப்பீர்கள் ஆயின் எமது மூத்தமகன் தங்களது இடப்பக்கத்திலும் இளைய மகன் வலப்பக்கத்திலும் அமரட்டும் என்று கூறினார்கள்.அதாவது இயேசுவின் சீடர்கள் அவரை ஒரு புரட்சிக்காரர் என்றே கருதினார்கள் என்று தெரிகிறது.அரசியல் புரட்சி சம்மந்தமான சில எண்ணங்கள் இயேசுவின் மதத்தில் இருந்திருக்கலாம்.ஆனால் அவருடைய சிஸ்யர்களில் ஒருவர் அரசியல் புரட்சி தவறிவிட்டதென்று கருதி தனது குருநாதரை காட்டிக்கொடுத்துவிட்டார்.இவர் இயேசு ஒரு மத புரட்சிக்காரர் என்பதையும் அவர் தமது நாடு ஒரு தெய்வநாடு என்று சொல்லி வந்தார் என்பதையும் மறந்துவிட்டார்.எனவே யூதர்களின் ராச்சியம் அழிந்துபோனபோதிலும் அவர்களுடைய இனம் இயேசுவின் காலம் வரையிலும் இருந்து வந்தது.
இங்கிலாந்திலும் ருஸ்ஸியாவிலும் சேர்ந்து சில அறிஞர்கள் தேசியமானது குறுகிய மனப்பான்மை கொண்டது எனவும்.நவீன நாகரிக உலகத்திற்கு இது பொருந்தாது எனவும் கூறுகிறார்கள்.இவர்களோடு சில சீன இளையோரும் சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.இந்த உலக சகோதரதுவம் நல்லதா?பேச்சளவில் இது நல்ல தத்துவம் தான்.ஒரு நாட்டை ஆதிக்கம் கொள்ளவிரும்புவோர் இந்த உலக சகோதர தத்துவத்தை சொல்லி தான் வருகிறார்கள்.ஆனால் ஓர் எண்ணம் அல்லது தத்துவம் நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்க முன்னர் அனுட்டனத்தில் அது எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்.அந்த எண்ணம் அல்லது தத்துவம் நமக்கும் உலகத்துக்கும் நன்மை அளித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தால் அது நல்லது தான்.அது அனுபவ சாத்தியத்திற்கு கூட கொண்டுவரபட கூடாமல் போனால் நல்லதல்ல.

மற்றவர்களை வெற்றி கொள்ள ஏகாதிபத்திய முறையை கையாளும் தேசத்தினர் தான்.சலுகையோடு கூடிய தங்கள் பதவியையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திகொள்ளும் பொருட்டுஇந்த உலக சகோதரத்துவம் பற்றி பேசுகிறார்கள்.எப்படி ஒரு நூலாசிரியன் தனது ஜீவநோபாயத்திற்கு தனது எழுதுகோலை ஒரு கருவியாக உபயோகித்து கொள்கிறானோ அதைப்போலவே மானிட சமூகமானது தான் உயிர் வாழும் பொருட்டு தேசியத்தை ஒரு கருவியாக உபயோகிக்கிறது.தேசியம் அழிந்து போய் அதன் இடத்தில் உலக சகோதரதுவம் ஏற்பட்டுவுடுமானால் நாம் உயிர்வாழ முடியாது.இயற்கை சக்திகளின் துணை கொண்டு மற்ற இனத்தினர் நம்மை அடக்கிவிடுவர்.இயற்கை விதிகளின் படி பலசாலிகள்தான் வழ்கிறார்கள்.பலவீனர்கள் அழிந்துபோகிறார்கள்.நம்முடைய இனம் அழிந்து போக வேண்டும் என்று நம்மில் யாருமே விரும்பமாட்டார்கள்.வருங்காலத்தில் நமது தேசிய உணர்ச்சியை புதுப்பிக்க ஏதேனும் மார்க்கத்தை கண்டுபிடித்தால்.நம்மை வேறுவிதமான அரசியல்,பொருளாதார சக்திகள் அழுத்தினால் கூட நாம் வாழ்ந்துகொண்டிருக்க முடியும்.
எல்ல வல்லரசுகளும் லெனினை ஏன் எதிர்த்தன தெரியுமா? அவர் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளது எனவும் ஒரு பக்கம் 125கோடி மக்களும் இன்னொரு பக்கம் 25 கோடி மக்களும் இருக்கிறார்கள் என்றும்பின்னவர் முன்னவரை அடக்கியாண்டுஅதன் மூலமாக இயற்கைக்கு மாறுபட்டு செல்கிறார்கள் என்றும் இந்த அடக்குமுறையை அடக்குவதே இயற்கை நியதிப்படி நடப்பதாகும் என்றும் சொல்லு வந்தார்.
உலக அடக்குமுறையை எதிர்ப்பதாக இருந்தால் இந்த 125கோடி மக்களுடனும் சேர்ந்துகொள்ள வேண்டும்.முதலில் நாம் தேசியத்தை வலியுறுத்தி நமக்குள்ளே ஒற்றுமையை எற்படுத்தி கொள்ள வேண்டும்.சுயநல சக்திகளை உலகத்தினின்று விரட்டியடித்துவிட்ட பிறகு நாம் உலக சகோதரத்துவம் குறித்து பேசிக்கொள்ளலாம்.



ஸ்ன் யாட் ஸென்பிறப்பு:12-கார்த்திகை 1866.

மஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து 17 ஆண்டுகள் போராடினார்.

1912 ஜனவரி மாதம் முதல் குடியரசு அமைந்தது.

இறப்பு12-பங்குனி1925.

ஸான்மின் கோட்பாடுகள்-தேசியம்,ஜனநாயகம்,மக்களின் வாழ்வாதாரம்.



Read more...

Wednesday, September 24, 2008

நடுக்கடலில் அபாயம் இருந்தும் தொடரும் படகு பயணம்....


முற்குறிப்பு :பிரசுரமாகும் இந்த ஆக்கமானது ஆங்கிலத்தில் டாக்டர் வி. சூரியநாராயணன் (ஓய்வு பெற்ற மூத்த விரிவிரயாளர்,சென்னை பல்கலைக்கழகம் )அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதன் தமிழ் ஆக்கம் ஆகும்.ஆக்கத்தின் பிரதான பகுதிகளையும் விவாத்ததிற்குரிய பகுதிகளையும் மொழிபெயர்த்து பிரசுரிக்கிறோம்.நண்பர்களின் கருத்துக்களை விம்பம் வரவேற்கிறது.

செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து தலமன்னார் நோக்கி 13 பேருடன் பயணித்த படகு ஆதாம் பாலத்துக்கு அருகில் கடலில் மூழ்கியதில் இலங்கை தமிழ் அகதிகள் 8 பேர் பலியானார்கள்.இதில்4 பெண்கள்,2 குழந்தைகள்,2ஆண்கள் அடங்குவர்.மானாமதுரை,புளியங்குடி,திருவண்ணாமலை முகாம்களில் வசித்துவந்த இவர்கள் தமது பயணத்திற்காக தலா 6000 ரூபா செலுதியுள்ளார்கள்.

இதேபோல ஒக்டோபர் 1996 இல் 14 பேர் பலியானார்கள்.மிகவும் மோசமான சம்பவம் பிப்ரவரி 1997 இல் நிகழ்ந்தது.இதில்165 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள்.உலகின் பல பாகங்களிற்கும் இலங்கையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறும் இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளின் நிலை பெரும் மனித அவலம் நிறைந்தது.

புவியியல் கேந்திரமும்,இன உறவு முறையும் தமிழ்நாட்டிற்கு பெருமளவு அகதிகள் படகில் வருவதை இலகுபடுத்தியதோடு புதுடில்லியும் ,சென்னையும் அவர்களின் அகதி நிலையை அங்கிகரித்ததோடுபுரிந்துணர்வு மற்றும் மனிதாபிமானத்தோடு அவர்களை ஏற்றுகொண்டார்கள்.அரசு அவர்களுக்கு இலவச வீட்டு வசதி செய்து கொடுத்துள்ளதோடு இலவச கல்வி இலவச மருத்துவம் நிதி உதவி போன்றவற்றையும் வழங்குகிறது.அத்தியாவசிய தேவைகளான அரிசி மண்ணெண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் வழங்குகிறது.இதனை விட தமிழ்நாடு அரசு அவர்கள் வேலை செய்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.தாம் பாதுகாப்பாக இருப்பதாக இவர்கள் உணர்கிறார்கள்.செலவினை ஏற்கக்கூடிய பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள் .

4 அலைகளாக தமிழ் நாட்டிற்கு தமிழ் அகதிகள் வருகை தந்தார்கள்.

1.)24-07.1983 முதல் 27-07.1987 வரை மொத்த அகதிகள் 1 34053
2.)இரண்டாம் ஈழப்போர் ஆரம்பம் 06/1990. 25/08/1989 இற்கு பின்னர் 1 22000 தமிழர் தமிழ் நாடு வந்தார்கள்.ஐ நா தகவல்களின் படி 20-01/1992 முதல்20-03/1995 காலப்பகுதியில் 58 188 பேர் தனியார் கப்பல் மூலம் மற்றும் விமானம் மூலம் திரும்பவும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
3.)04/1995 மூன்றாம் ஈழக்கட்டப்போர் ஆரம்பம்.அது முதல் 2005 காலப்பகுதி வரை 22418 பேர் அகதிகளாக வருகை தந்தார்கள்.
4.)பிரகடனம் செய்யப்படாத 4 ஆம் ஈழப்போர்.ஜனவரி2006 முதல் செப்டம்பர் 2008 வரை 22 381 பேரகதிகளாக தமிழ் நாடு வந்துள்ளார்கள்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தனியார் கப்பல் மூலம் 25 585 பேர் இலங்கை திரும்பினர்.

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகள் மூன்று வகைப்படுவார்கள்
1.)117 முகாம்களில் வாழும் 72 889 பேர்.
2.)முகாமிற்கு வெளியில் வாழும் 23 489 பேர்.
3.)செங்கல்பட்டு சிறப்பு முகாம் 48 பேர்.

இலங்கை திரும்முவதற்கு வேறுமார்க்கம் இருந்த போதும் சட்டவிரோத படகு பயணத்தை இவர்கள் மேற்கொள்வதே இங்க்கு பிரதானமானது.ஏன் இவர்கள் இந்த வழியை நாடுகிறார்கள்.?

பதில் சுலபமானது.வெளியேறுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற ஆகக் குறந்தது 3 மாதம் ஆகிறது.பத்திரம் பெறுவதற்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தொகை.கொழும்பு சென்று வட பகுதிக்கு செல்வதில் உள்ள சிரமம் இப்படி பல காரணங்கள்.நடுக்கடலில் அபாயம் இருந்தும் சட்டவிரோத படகுப் பயணம் தொடர்கிறது.

விம்பம்

செய்தி குறிப்புக்கள்;சென்னையில் காரில் இரவில் சுற்றிய 6 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர். ...
thatstamil.oneindia.in
ஈழத்தமிழர்கள் வாழும் அகதி முகாம்களின் நிலை… ... இந்நிலையில் தமிழகத்திலுள்ள அகதி ...
www.peoplesrights.in
அகதி முகாமிலிருந்த இலங்கையர் மாயம் கியூ பிரிவு ..

ராமேஸ்வரம் : அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ...
article.wn.com/view/WNAT92ae7f456c4a9f7fa7097f636e3eb82e/ - 188k -
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாம்களை உளவுத் துறையினர் தீவிரமாக ...
thatstamil.oneindia.mobi/news
தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி ... மண்டயம் அகதி முகாமில் தங்கியுள்ள மகேஸ்வரி ...
www.keetru.com/visai/jul06/balamurugan
ஒப்பந்தத்தில் அகதி என்பதற்கான விளக்கம் ... அகதி முகாம்களைப் பார்வையிட்ட விவரம் ...
www.kalachuvadu.com/issue-80/kalaaivu.htm - 233k
முதல்வர் வருகை: மதுரையில் அகதிகளுக்கு தடை ... அகதிகள் முகாம்களை விட்டு வெளியே வர 6ம் ...
thatstamil.oneindia.in
thatstamil.oneindia.in/news/2008/08/05/tn-refugees-banned-from-going-out-of-

இலங்கை அகதிகளின் சொத்துக்களை ... அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர்; "அகதிகள் என்ற ...
www.thinakkural.com

Read more...

Saturday, September 20, 2008

விட்டு செல்கிறேன்

இரவு என்பது
என்னை எப்போதும் நேசிக்கிறது.
இரவுப் பொழுதை இரசிக்கும்
நிலாவாய் நான்........

இரவின் சுகம்
என்றுமே அந்தரங்கமானது,
விடுப்பு கேட்பவர்கள்
மனிதர்களாகவே
எப்பொழுதும்
வாழ்கிறார்கள்......

இரவு வாய்மூடி
தூக்கம் செய்ததில்
சிலர் பகலை
நம்பினார்கள்.....

எனது இரவு நேரத்து
கனவுகளை கலைப்பதை தவிர
எனக்கு வழியில்லை

மரணம் நெருங்கும் வரை
தேடுகிறேன் மனிதர்களை........
விடியலும்,இரவும்
பழக்கமாகி போன இவர்களுக்கு நடுவில்
மனிதத்தை தேடுவது

சிறு வயதில்

தும்பி பிடித்ததற்கு சமானமானது.


எனது இரவு எனக்காக மீண்டும் வேண்டும்
செவ்வானம் எனக்கு தேவையில்லை
எனது இரவை கலைத்த


கீழ்வானம் ஆவது சிவக்கட்டும்
விட்டு செல்கிறேன்


எனது கனவுகளை



இன்னொரு மனிதன்
பயன்பெறட்டும்

Read more...

Thursday, September 18, 2008

அம்பாறை ஹர்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே இது ரீம் வீ வி யின் திட்டமிட்ட சதி

Read more...

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP