Tuesday, November 11, 2008

11-11-1918 -காலை பதினொரு மணி .......



1918 ஆம் ஆண்டு பதினோராம் மாதம் பதினோராம் திகதி காலை பதினொரு மணி உலகத்தை உலுக்கிய முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த நாள்.தொண்ணூறு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் உலகில் இன்னமும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை.முதன் முதலாக போரில் விசவாயு பயன்படுத்தப்பட்ட யுத்தம்.ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நேச நாடுகளின் படைகள் நுழைந்ததுடன் முடிவுக்கு வந்தது.ஒன்பது மில்லியன் படையினர் இறக்க இருபதியொரு மில்லியன் படையினர் காயம் அடைய ஆக குறைந்தது ஐந்து மில்லியன் பொதுமக்களும் பலி கொள்ளப்பட்டனர்.ஜேர்மனி,ரஷ்யா,ஆஸ்ரியா ‍ஹங்கேரி,பிரான்ஸ்,இங்கிலாந்து ஆகியா நாடுகளை சேர்ந்தோர் சராசரியாக ஒவ்வொரு மில்லியன் மக்கள் பலியானார்கள்.


ஜூன் மாதம் இருபத்தியெட்டாம் திகதி 1914 ஆம் வருடம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமே இந்த உலக யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.சேர்பிய நாட்டவரால் ஆஸ்திரிய இளவரசரும் அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட சேர்பியா மீதான போர் பிரகடனத்தை ஆஸ்திரியா ஜூலை இருபத்திஎட்டாம் திகதி வெளியிட்டது.இருபத்தி ஒன்பதாம் திகதி சேர்பிய தலைநகர் மீதான தாக்குதலை ஆஸ்திரிய படை ஆரம்பித்தது.சேர்பியாவுக்கு ஆதரவாக பிரித்தானியா,பிரான்ஸ்,ரஷ்யா,இத்தாலி ஆகியநாடுகளும்,ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக ஜேர்மனி,ஹங்கேரி,பல்கேரியா,துருக்கி ஆகிய நாடுகளும் களம் இறங்க 1914 ஆகஸ்ட் மாதம் முதலாம் உலகப் போர் வெடித்தது.1561 நாட்கள் நீடித்த யுத்தம் 11/11/1918 பகல் 11 மணிக்கு முடிவுக்கு வந்தது.இந்த யுத்தகாலத்தில் தான் ரஷ்யாவில் முதலாவது கம்யூனிச சாம்ரச்சியம் உதயமாகியது.பல புதிய நாடுகள் பிறப்பெடுத்தன.90 வருடங்கள் கடந்தாலும் உலகில் இன்னும் யுத்தம் ஓயவில்லை

0 comments:

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP