Sunday, August 31, 2008

தமிழ் மக்களை நாம் கைவிட மாட்டோம் இந்திய பிரதமர் உறுதி ;தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்....

Monday, August 11, 2008

கைவிடப்பட்டார்...........

புழுதி படர்ந்த
எனது
ஊரின்தெருக்களை
நினைத்துப் பார்க்கிறேன்,

முன்னர் எல்லாம்
சத்தம் செய்து
எமது இரவைகலைத்த
பறவைகள்அங்கில்லை,

புழுதி படர்ந்த
எனது தெரு
இன்றும்
புழுதியைநேசித்தபடி.............

அன்று ஒரு நாள்
மின்சார கம்பிக்குள்
வாழ்வை தொலைத்த காகத்துக்காய்
அழுத நினைவு
இப்போதும்பாரமாய் கனக்கிறது.

துலா மிதிப்பின் பாரத்தில்
விட்டு சென்ற உறவுகள்
இதுவரை அறியவில்லை
காகம் துரத்திய குயில்களை,

பழுத்தல் பூவரசு
சொல்லாது என்ற நம்பிக்கையில்
வாழ்வு தொடர்கிறது...............

குயில் இப்போது கூவுவது இல்லை.
காகம் இப்போது கரைவதும் இலலை.
துலாக் கயிறு இப்போது பாரமும் இல்லை.

நம்பினோர் கைவிடப்பட்டார்.

ஒரு நேர இரவில்.............

அதே இரவு
இன்றும் விடிகிறது.,....
ஒரு நேர இரவில்
தனது விடியலுக்காக

என்றோ சிறு வயதில்
நான் இரசித்த
அந்த நிலாவை
அதுஏன்முழுங்கியது.,

ஏப்பம் விட்டபோது
கதிரவனும் சந்திரனும்
கை கோர்த்ததை
பார்க்க முடிகிறது.

தொலவில் தெரிந்த

நட்சத்திரங்கள்
காணாமல் போயின ...


களவாடிய திருடர்கள்
ஒதுங்க இடம் இன்றி
ஒழித்துக் கொண்டார்கள்
ஒதுங்க இடம் தேடி..........

பவள மல்லிகை வாசத்தில்
அன்றைய இரவில்
பகலையும் இரவையும்

பிரித்துக் கொண்ட
நாம்
மதியத்தையும்
மாலையையும்
பிரிக்கத்தவறினோம்.

இரவு மீண்டும் விடிகிறது....
தான் தொலைத்த
அந்தஇரவைத்தேடி.....


அதே இரவு
மீண்டும்விடிகிறது
தனதுஇரவுக்காய்...................

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP