Saturday, July 4, 2009

மனு நீதி.....


இரவுக்கும் பகலுக்குமான வெளி
தனக்கான வர்ணத்தை பூசியது இல்லை,
வானத்துக்கு வர்ணம் பூசியோர் கனவு
புதியதோர் வெளியை தேடி கொண்டது,
அர்த்தநாசிருவரை நம்பும்படி
சாம்பல் வெளி கேட்டுக் கொண்டது,

மறைந்து போன புள்ளியை,
கேள்விகுறிகளும்,ஆச்சரிய குறிகளும்,
தொடர் புள்ளிகளும் ஆக்கிரமித்து கொண்டன,
புதிய கேள்விகளும் புதிய பதில்களும்
பிறப்பெடுத்தன புதிய சபையில்.

மனுநீதியின் புதிய சபையில்
நிறுத்தப்பட்டேன்
அப்போது கேள்வி கேட்டோர் எல்லாம் புதியவர்கள்,
பதில்களை கேட்க அவர்கள் தயாரகவில்லை,
தொலைத்துவிட்ட ஒரு கனவை பற்றியே
மீண்டும் மீண்டும் பேசினார்கள்...
அது தான் எனது கனவும் என்றேன்,
நம்ப மறுத்தார்கள்,
உனக்க்கான கனவை நீ தொலைத்து விட்டாய்,
நீ மனிதனும் அல்ல தமிழனும் அல்ல என்றார்கள்.
நடு நடுவே தமக்குள் நிறைய பேசினார்கள்,

அவர்களின் பகல் விடிந்தது
எனது இரவு விடிந்தது...
கனவு தெளிந்து விழித்தபோது
வல்லூறு பார்வையிலிருந்து தப்பிய கோழி குஞ்சுகள்,
கழுகுகளால் குதறப்பட்டிருந்தன......

0 comments:

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP