Saturday, September 27, 2008

தேசியத்தின் தேவை.................


ஸன் யாட் ஸென் ஆற்றிய 16 சொற்பொழிவுகளை கொண்ட சுதந்திரத்தின் தேவைகள் என்ற புத்தகத்தை அண்மையில் வாசிக்க நேர்ந்தது.தமிழாக்கத்தை வெ.சாமிநாத சர்மா சுந்திருந்தார்.தேசியத்தின் தேவை என்ற சொற்பொழிவை விம்பம் தனது நண்பர்களுக்காக பதிவு செய்கிறது.இயலுமானவரை சுருக்கியே இப் பதிவு பதிவிடப்படுகிறது.நண்பர்களின் கருத்துக்கள் உற்சாகம் தரும் .தேசிய உணர்ச்சி என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு 10-02-1924 இல் நிகழ்த்தப்பட்டது



ஒரு ராஜ்யம் முன்னுக்கு வருவதற்கும் தனது வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி கொள்வதற்கும் தேசிய உண்ர்ச்சி அவசியமானதாகும்.அந்த உண்ர்ச்சி இருப்பது ஒரு பொக்கிசம் இருப்பது போலாகும்.இன்று சீனா அதனை இழந்துவிட்டது.ஏன்?
இந்த தேசிய உணர்ச்சியை நாம் ஒரு நாளில் இழக்கவில்லை.அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே இழந்துவிட்டோம்.1911 ஆம் வருட புரட்சிக்கு முன்னர் தேசியத்தை எதிர்த்து பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாவற்றையும் பாருங்கள்.அந்த காலத்தில் தோன்றிய நூல்களில் எல்லாம் தேசிய உண்ர்ச்சி காணப்படவில்லை.அவை ம்ஞ்சு அரச புகளையே பாடி நின்றன.அந்த அரச பரம்பரைக்கு எதிராக ஒரு வரி எழுத கூட யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை.சமீப காலத்தில் புரட்சி எண்ணங்கள் எழுந்த சமயத்தில் கூட தாங்களே புலவர்கள் என்று பெருமைப்படுத்திக்கொண்ட பலர் தினம் தோறும் ம்ஞ்சுக்கள் புகளையே பாடினார்கள்.நாங்கள் டோக்கியோ நகரத்தில் ஜனபத்திரிகை என்ற பெயருடன் ஒரு தினசரி நடத்தி வந்தோம்.அதன் மூலமாக தேசிய பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது மஞ்சுக்கள் சீனாவை ஆண்டுவந்ததால் நாம் அடிமை பிரசைகள் ஆகவில்லை என்று சிலர் கூறிக்கொண்டு வந்தார்கள்.இங்கனம் கூறிக்கொண்டு இருப்போர் மஞ்சு அரச பரம்பரையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ஒரு சங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல , சீனாவின் தேசிய உணர்ச்சியை நசுக்கவும் இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் சீனாவில் வசிப்பவர்கள் அல்லர்.சீனாவுக்கு புறம்பான நாடுகளில் வசிக்கும் சீனர்கள்.ஆனால் சீனாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு இவர்கள் புரட்சியை ஆதரித்தார்கள்.
சீனாவில் தேசிய உணர்ச்சி இறந்து போனதற்கான சில காரணங்களை கூற விரும்புகிறேன்.இதற்கு காரணங்கள் பல.இவற்றில் முக்கியமானது நாம் அந்நிய இனத்தினுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பது தான்.ஒரு இனம் மற்றொரு இனத்தை ஆதிக்கம்கொண்டுவிட்டதேஆனால் ஆதிக்கம் கொள்ளப்பட்ட இனம் சுதந்திர எண்ணம் கொண்டு வாழும்படி அனுமதிக்கப்படுவதில்லை.


அந்நியருடைய ஆதிக்கத்தினால் சீனாவின் தேசியம் நசுக்கப்பட்டுவிட்டது.ஆனால் சீனர்களைவிட அடிமைப்பட்டுப்போன இனத்தினர் இன்னும் பலர் இருக்கிறார்கள்.உதாரணமாக யூதர்கள் .இயேசுவின் திருநாளைக்கு முன்பே தங்கள் நாட்டை இழந்து பிறரால் வெற்றி கொள்ளப்பட்ட இனம் ஆகிவிட்டார்கள்.இயேசுநாதர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தகாலத்தில் அவருடைய சீடர்கள் அவரை புரட்சிகாரர் என்றே கருதினார்கள்.அவர் யூதர்களின் அரசன் என்றே கருதப்பட்டார்.அவருடைய இரண்டு சீடர்களின் பெற்றோர்கள் அவரை பார்த்து ஆண்டவரே ; என்க்களுடைய நோக்கத்தை நிறைவேற்றி வைப்பீர்கள் ஆயின் எமது மூத்தமகன் தங்களது இடப்பக்கத்திலும் இளைய மகன் வலப்பக்கத்திலும் அமரட்டும் என்று கூறினார்கள்.அதாவது இயேசுவின் சீடர்கள் அவரை ஒரு புரட்சிக்காரர் என்றே கருதினார்கள் என்று தெரிகிறது.அரசியல் புரட்சி சம்மந்தமான சில எண்ணங்கள் இயேசுவின் மதத்தில் இருந்திருக்கலாம்.ஆனால் அவருடைய சிஸ்யர்களில் ஒருவர் அரசியல் புரட்சி தவறிவிட்டதென்று கருதி தனது குருநாதரை காட்டிக்கொடுத்துவிட்டார்.இவர் இயேசு ஒரு மத புரட்சிக்காரர் என்பதையும் அவர் தமது நாடு ஒரு தெய்வநாடு என்று சொல்லி வந்தார் என்பதையும் மறந்துவிட்டார்.எனவே யூதர்களின் ராச்சியம் அழிந்துபோனபோதிலும் அவர்களுடைய இனம் இயேசுவின் காலம் வரையிலும் இருந்து வந்தது.
இங்கிலாந்திலும் ருஸ்ஸியாவிலும் சேர்ந்து சில அறிஞர்கள் தேசியமானது குறுகிய மனப்பான்மை கொண்டது எனவும்.நவீன நாகரிக உலகத்திற்கு இது பொருந்தாது எனவும் கூறுகிறார்கள்.இவர்களோடு சில சீன இளையோரும் சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.இந்த உலக சகோதரதுவம் நல்லதா?பேச்சளவில் இது நல்ல தத்துவம் தான்.ஒரு நாட்டை ஆதிக்கம் கொள்ளவிரும்புவோர் இந்த உலக சகோதர தத்துவத்தை சொல்லி தான் வருகிறார்கள்.ஆனால் ஓர் எண்ணம் அல்லது தத்துவம் நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்க முன்னர் அனுட்டனத்தில் அது எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்.அந்த எண்ணம் அல்லது தத்துவம் நமக்கும் உலகத்துக்கும் நன்மை அளித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தால் அது நல்லது தான்.அது அனுபவ சாத்தியத்திற்கு கூட கொண்டுவரபட கூடாமல் போனால் நல்லதல்ல.

மற்றவர்களை வெற்றி கொள்ள ஏகாதிபத்திய முறையை கையாளும் தேசத்தினர் தான்.சலுகையோடு கூடிய தங்கள் பதவியையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திகொள்ளும் பொருட்டுஇந்த உலக சகோதரத்துவம் பற்றி பேசுகிறார்கள்.எப்படி ஒரு நூலாசிரியன் தனது ஜீவநோபாயத்திற்கு தனது எழுதுகோலை ஒரு கருவியாக உபயோகித்து கொள்கிறானோ அதைப்போலவே மானிட சமூகமானது தான் உயிர் வாழும் பொருட்டு தேசியத்தை ஒரு கருவியாக உபயோகிக்கிறது.தேசியம் அழிந்து போய் அதன் இடத்தில் உலக சகோதரதுவம் ஏற்பட்டுவுடுமானால் நாம் உயிர்வாழ முடியாது.இயற்கை சக்திகளின் துணை கொண்டு மற்ற இனத்தினர் நம்மை அடக்கிவிடுவர்.இயற்கை விதிகளின் படி பலசாலிகள்தான் வழ்கிறார்கள்.பலவீனர்கள் அழிந்துபோகிறார்கள்.நம்முடைய இனம் அழிந்து போக வேண்டும் என்று நம்மில் யாருமே விரும்பமாட்டார்கள்.வருங்காலத்தில் நமது தேசிய உணர்ச்சியை புதுப்பிக்க ஏதேனும் மார்க்கத்தை கண்டுபிடித்தால்.நம்மை வேறுவிதமான அரசியல்,பொருளாதார சக்திகள் அழுத்தினால் கூட நாம் வாழ்ந்துகொண்டிருக்க முடியும்.
எல்ல வல்லரசுகளும் லெனினை ஏன் எதிர்த்தன தெரியுமா? அவர் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளது எனவும் ஒரு பக்கம் 125கோடி மக்களும் இன்னொரு பக்கம் 25 கோடி மக்களும் இருக்கிறார்கள் என்றும்பின்னவர் முன்னவரை அடக்கியாண்டுஅதன் மூலமாக இயற்கைக்கு மாறுபட்டு செல்கிறார்கள் என்றும் இந்த அடக்குமுறையை அடக்குவதே இயற்கை நியதிப்படி நடப்பதாகும் என்றும் சொல்லு வந்தார்.
உலக அடக்குமுறையை எதிர்ப்பதாக இருந்தால் இந்த 125கோடி மக்களுடனும் சேர்ந்துகொள்ள வேண்டும்.முதலில் நாம் தேசியத்தை வலியுறுத்தி நமக்குள்ளே ஒற்றுமையை எற்படுத்தி கொள்ள வேண்டும்.சுயநல சக்திகளை உலகத்தினின்று விரட்டியடித்துவிட்ட பிறகு நாம் உலக சகோதரத்துவம் குறித்து பேசிக்கொள்ளலாம்.



ஸ்ன் யாட் ஸென்பிறப்பு:12-கார்த்திகை 1866.

மஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து 17 ஆண்டுகள் போராடினார்.

1912 ஜனவரி மாதம் முதல் குடியரசு அமைந்தது.

இறப்பு12-பங்குனி1925.

ஸான்மின் கோட்பாடுகள்-தேசியம்,ஜனநாயகம்,மக்களின் வாழ்வாதாரம்.



0 comments:

  © Blogger templates vimbam by vimbam.blogspot.com 2008

Back to TOP