தேசியத்தின் தேவை.................
இந்த தேசிய உணர்ச்சியை நாம் ஒரு நாளில் இழக்கவில்லை.அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே இழந்துவிட்டோம்.1911 ஆம் வருட புரட்சிக்கு முன்னர் தேசியத்தை எதிர்த்து பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாவற்றையும் பாருங்கள்.அந்த காலத்தில் தோன்றிய நூல்களில் எல்லாம் தேசிய உண்ர்ச்சி காணப்படவில்லை.அவை ம்ஞ்சு அரச புகளையே பாடி நின்றன.அந்த அரச பரம்பரைக்கு எதிராக ஒரு வரி எழுத கூட யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை.சமீப காலத்தில் புரட்சி எண்ணங்கள் எழுந்த சமயத்தில் கூட தாங்களே புலவர்கள் என்று பெருமைப்படுத்திக்கொண்ட பலர் தினம் தோறும் ம்ஞ்சுக்கள் புகளையே பாடினார்கள்.நாங்கள் டோக்கியோ நகரத்தில் ஜனபத்திரிகை என்ற பெயருடன் ஒரு தினசரி நடத்தி வந்தோம்.அதன் மூலமாக தேசிய பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது மஞ்சுக்கள் சீனாவை ஆண்டுவந்ததால் நாம் அடிமை பிரசைகள் ஆகவில்லை என்று சிலர் கூறிக்கொண்டு வந்தார்கள்.இங்கனம் கூறிக்கொண்டு இருப்போர் மஞ்சு அரச பரம்பரையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ஒரு சங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.அதுமட்டுமல்ல , சீனாவின் தேசிய உணர்ச்சியை நசுக்கவும் இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் சீனாவில் வசிப்பவர்கள் அல்லர்.சீனாவுக்கு புறம்பான நாடுகளில் வசிக்கும் சீனர்கள்.ஆனால் சீனாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு இவர்கள் புரட்சியை ஆதரித்தார்கள்.
சீனாவில் தேசிய உணர்ச்சி இறந்து போனதற்கான சில காரணங்களை கூற விரும்புகிறேன்.இதற்கு காரணங்கள் பல.இவற்றில் முக்கியமானது நாம் அந்நிய இனத்தினுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பது தான்.ஒரு இனம் மற்றொரு இனத்தை ஆதிக்கம்கொண்டுவிட்டதேஆனால் ஆதிக்கம் கொள்ளப்பட்ட இனம் சுதந்திர எண்ணம் கொண்டு வாழும்படி அனுமதிக்கப்படுவதில்லை.
இங்கிலாந்திலும் ருஸ்ஸியாவிலும் சேர்ந்து சில அறிஞர்கள் தேசியமானது குறுகிய மனப்பான்மை கொண்டது எனவும்.நவீன நாகரிக உலகத்திற்கு இது பொருந்தாது எனவும் கூறுகிறார்கள்.இவர்களோடு சில சீன இளையோரும் சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.இந்த உலக சகோதரதுவம் நல்லதா?பேச்சளவில் இது நல்ல தத்துவம் தான்.ஒரு நாட்டை ஆதிக்கம் கொள்ளவிரும்புவோர் இந்த உலக சகோதர தத்துவத்தை சொல்லி தான் வருகிறார்கள்.ஆனால் ஓர் எண்ணம் அல்லது தத்துவம் நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்க முன்னர் அனுட்டனத்தில் அது எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்.அந்த எண்ணம் அல்லது தத்துவம் நமக்கும் உலகத்துக்கும் நன்மை அளித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தால் அது நல்லது தான்.அது அனுபவ சாத்தியத்திற்கு கூட கொண்டுவரபட கூடாமல் போனால் நல்லதல்ல.
எல்ல வல்லரசுகளும் லெனினை ஏன் எதிர்த்தன தெரியுமா? அவர் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளது எனவும் ஒரு பக்கம் 125கோடி மக்களும் இன்னொரு பக்கம் 25 கோடி மக்களும் இருக்கிறார்கள் என்றும்பின்னவர் முன்னவரை அடக்கியாண்டுஅதன் மூலமாக இயற்கைக்கு மாறுபட்டு செல்கிறார்கள் என்றும் இந்த அடக்குமுறையை அடக்குவதே இயற்கை நியதிப்படி நடப்பதாகும் என்றும் சொல்லு வந்தார்.
உலக அடக்குமுறையை எதிர்ப்பதாக இருந்தால் இந்த 125கோடி மக்களுடனும் சேர்ந்துகொள்ள வேண்டும்.முதலில் நாம் தேசியத்தை வலியுறுத்தி நமக்குள்ளே ஒற்றுமையை எற்படுத்தி கொள்ள வேண்டும்.சுயநல சக்திகளை உலகத்தினின்று விரட்டியடித்துவிட்ட பிறகு நாம் உலக சகோதரத்துவம் குறித்து பேசிக்கொள்ளலாம்.
Read more...



